Home One Line P1 பிகேஆரிலிருந்து விலகியதால் 10 மில்லியன் செலுத்தக் கோரி சுரைடா மீது வழக்கு

பிகேஆரிலிருந்து விலகியதால் 10 மில்லியன் செலுத்தக் கோரி சுரைடா மீது வழக்கு

592
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர் சுரைடா கமாருடினிடமிருந்து 10 மில்லியன் ரிங்கிட் கோரி பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தனது கட்சி சார்பாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சுரைடா கட்சியில் இருந்து விலகி, மற்றொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அல்லது சுயேச்சைப் பிரதிநிதியாகிவிட்டால், கட்சிக்கு 10 மில்லியன் ரிங்கிட் செலுத்த ஒப்புக் கொண்ட ஒரு பத்திரத்தைத் தொடர்ந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பிரதிநிதிகள் மீது வழக்குத் தொடரவும் பிகேஆர் திட்டமிட்டுள்ளது.