Home Featured நாடு நாடு திரும்பினார் மொகிதீன் யாசின்: விமான நிலையத்தில் திரண்ட ஆதரவாளர்கள்

நாடு திரும்பினார் மொகிதீன் யாசின்: விமான நிலையத்தில் திரண்ட ஆதரவாளர்கள்

768
0
SHARE
Ad

Muyiddinசிப்பாங்- ஆஸ்திரேலியா சென்றிருந்த முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று புதன்கிழமை காலை நாடு திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் பலர் விமான நிலையத்தில் திரண்டு அவரை வரவேற்றனர்.

மேலும், அவர்கள் அனைவரும் “நான் தலையாட்டி மனிதனல்ல” (“I am not a yes man”) என்ற வாசகத்துடன் கூடிய டி-சட்டைகள் அணிந்திருந்தனர்.

நேற்று காலை 7.30 மணியளவில் கோலாலம்பூர் வந்தடைந்தார் மொகிதீன். இருவார கால பயணமாக அவர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி விவகாரம் குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்தபோது, “நான் தலையாட்டி மனிதனல்ல” என்ற வாசகத்தைப் பயன்படுத்தி இருந்தார் மொகிதீன். அதை குறிக்கும் விதமாகவே அவரது ஆதரவாளர்கள் அந்த வாசகத்துடன் கூடிய சட்டைகளை அணிந்து வந்திருந்தனர்.

விமான நிலையத்தில் திரண்ட ஆதரவாளர்களில் மொகிதீனின் மூத்த சகோதரர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் யாசினும் ஒருவர்.

விமான நிலைய வருகை பகுதியில் மொகிதீன் தம்பதியர் தென்பட்டதும் ஆதரவாளர்கள் கரவொலி எழுப்பினர். பின்னர் அவரை அணைத்தும், கைகுலுக்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், ஆதரவாளர்களில் ஒருவர் மேற்குறிப்பிட்ட டி-சட்டையை அவருக்குப் பரிசளித்தார்.

அந்த சட்டையுடன் மொகிதீன் இருப்பதை புகைப்படக்காரர்கள் உடனடியாக கேமராக்களில் பதிவு செய்து கொண்டனர்.