சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் அந்நாட்டு மக்களை அகதிகளாக்கி விட்டது. பலர் நிரந்தர இருப்பிடத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான கடல் வழிப்பயணம் மேற்கொள்கின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தும் விடுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் இறந்த பொழுது ஏற்படாத பாதிப்பு, சிறுவன் ஆயலான் குர்தியின் மறைவிற்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அகதிகள் தங்களை காப்பாற்ற வேண்டும் என போராடவும் ஆரம்பித்து விட்டனர்.
“அனைவரும் கண்ணாடியில் ஒருமுறை நம்மை பார்த்து, எப்படி அவர்களுக்கு உதவலாம் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஃபின்லாந்தில் 30,000 பேருக்கு அடைக்கலம் கொடுக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.