Home Featured வணிகம் ரிங்கிட் வீழ்ச்சி மலேசியாவை திவாலாக்குமா? – கருவூல பொதுச் செயலர் விளக்கம்!

ரிங்கிட் வீழ்ச்சி மலேசியாவை திவாலாக்குமா? – கருவூல பொதுச் செயலர் விளக்கம்!

606
0
SHARE
Ad

Mohd-Irwan_malaysiaகோலாலம்பூர் – ரிங்கிட் சரிவின் காரணமாகவும், எண்ணெய் விலை வீழ்ச்சியினாலும் மலேசியா திவாலாக வாய்ப்புள்ளது என ஒரு சிலர் வாதம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என கருவூல பொதுச் செயலாளர் முகமட் இர்வான் செரிகர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதம் என்ற நிலையில் இன்றும் வலுவாகத்தான் உள்ளது.  மலேசியா தவிர பண்டகம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளும் இதே நிலையைத் தான் சந்தித்து வருகின்றன.”

“1997-1998 பொருளாதார சரிவை ஒப்பிடுகையில், நாம் தற்போது நல்ல நிலையில் தான் உள்ளோம். தற்போதும் நாம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். திவாலாகும் நிலை வந்தால் இதனை செய்ய முடியாது”

#TamilSchoolmychoice

“பிரதமர் துறை அமைச்சரான அப்துல் வாகிட் ஓமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார சிறப்புக் குழு விரைவில் இந்த சிக்கலுக்கு வழிகாணும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.