Home Featured நாடு கெவின் மாயம்: ‘எரிந்த கார் பற்றிய விசாரணைக்கு கால அவகாசம் தேவை’ – பேராக் காவல்துறை!

கெவின் மாயம்: ‘எரிந்த கார் பற்றிய விசாரணைக்கு கால அவகாசம் தேவை’ – பேராக் காவல்துறை!

569
0
SHARE
Ad

Kevin - Morais - Burnt car -ஹூத்தான் மெலிந்தாங் – செம்பனைத் தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட காரையும், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் மாயமான விவகாரத்தையும் அவ்வளவு எளிதில் ஒன்றிணைத்துவிட முடியாது என்று காவல்துறை கூறியுள்ளது.

ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் சுகைலி முகமட் சைன் கூறுகையில், அந்தக் காரின் உரிமையாளர் யார் என்பதை விசாரணையின் மூலம் கண்டறிய குறைந்தது ஒருவார கால அவகாசமாவது தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“விசாரணையின் அடிப்படையில், இன்றோ அல்லது நாளையோ எதுவும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது காரணம் இந்த விசாரணைக்கு அதிக நாட்கள் தேவைப்படும்” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் முகமட் சுகைலி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice