சமீபத்தில், சென்னையில் நடந்து முடிந்த அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீட்டாளர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இது குறித்து இளங்கோவன் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-“அதிமுக அரசு பெண்களை வைத்து குத்தாட்டம் போட வைத்த செயல் தமிழகத்திற்கே அவமானத்தை தேடித் தந்துள்ளது. என்னைப் பொருத்தவரை, நடந்து முடிந்தது முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல. அதிமுக மாநாடு தான்.”
ஜெயலலிதா-மோடி சந்திப்பு பற்றி விமர்சனம் செய்து அதிமுக தொண்டர்களின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த இளங்கோவன், இரண்டு லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈட்டித் தந்துள்ள மாநாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி உள்ளது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.