Home இந்தியா முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் – மீண்டும் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் – மீண்டும் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!

651
0
SHARE
Ad

evks-elangovanசென்னை – சென்னையில் நடைபெற்ற அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிமுக அரசு பெண்களை விட்டு குத்தாட்டம் போட வைத்துள்ள செயல் தமிழகத்திற்கே அவமானத்தை தேடித் தந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளதாக, ஊடகங்களில் (ஒன் இந்தியா) செய்திகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில், சென்னையில் நடந்து முடிந்த அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீட்டாளர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இது குறித்து இளங்கோவன் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-“அதிமுக அரசு பெண்களை வைத்து குத்தாட்டம் போட வைத்த செயல் தமிழகத்திற்கே அவமானத்தை தேடித் தந்துள்ளது. என்னைப் பொருத்தவரை, நடந்து முடிந்தது முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல. அதிமுக மாநாடு தான்.”

#TamilSchoolmychoice

thamizhnadu“விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடந்த இடம் வரை வழி எங்கும் சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கொடிகளும், பதாகைகளும் தான் வைக்கப்பட்டிருந்தன” என்று அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா-மோடி சந்திப்பு பற்றி விமர்சனம் செய்து அதிமுக தொண்டர்களின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த இளங்கோவன், இரண்டு லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈட்டித் தந்துள்ள மாநாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி உள்ளது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.