Home கலை உலகம் திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

582
0
SHARE
Ad

rajini05_001சென்னை- கன்னடத் தயாரிப்பாளர் அசோக் கெனி என்பவர் திப்பு சுல்தான் வாழ்க்கையைப் படமாக எடுக்க இருப்பதாகவும், அதில் திப்புசுல்தானாக நடிக்க ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திப்பு சுல்தான் கதையில் ரஜினி நடிக்கக்கூடாது என்று இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“இஸ்லாமிய மதவெறியால் தமிழர்களை வேட்டையாடியவர் திப்பு சுல்தான். தமிழக மக்கள் போற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள் கூட தனது சுயசரிதையான `நான் ஏன் பிறந்தேன்’ என்ற நூலில், ‘திப்புசுல்தானின் மதவெறி ஆட்சியால் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு வாழ,  எங்கள் பூர்விகமான பொள்ளாச்சியில் இருந்து எங்கள் குடும்பம் கேரளா மாநிலம் பாலக்காடு செல்ல நேரிட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழர்களையும், தமிழ்நாட்டையும் நேசிக்கும் ரஜினிகாந்த், தமிழர்களைக் கொன்று குவித்த திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கக் கூடாது.

அப்படியே மாற்று மொழியில் தயாரிக்கப்பட்டாலும் அந்தத் திரைப்படங்களை தமிழகத்தில் திரையிடக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

படம் பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.அதற்குள் எதிர்ப்பா? எனக் கேட்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கு ரஜினி என்ன சொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை.