Home இந்தியா பெங்களூர் அருகே துரந்தோ ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

பெங்களூர் அருகே துரந்தோ ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

1004
0
SHARE
Ad

train_1_2545065gகுல்பர்கா – பெங்களூருக்கு அருகில் துரந்தோ ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில்  2 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் படுகாயமடைந்தனர்.

ஐதராபாத் புனே துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடாக மாநிலம் குல்பர்கா மாவட்டம் வழியாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. மர்தூர் என்ற இடத்தில் வரும் போது ரயில் திடீரெனர் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

#TamilSchoolmychoice

விபத்து குறிந்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சோலாபூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ 2 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர்  சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்துத் தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குல்பர்கர் 0847-2255066/2255067 செகந்திராபாத் 040- 27700968

 

Comments