Home Featured நாடு அல் ஜசீரா செய்தியாளர் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு

அல் ஜசீரா செய்தியாளர் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு

630
0
SHARE
Ad

khalid-abu-bakar-perhimpunan-8-meiகோலாலம்பூர் – மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபுவின் மரணம் குறித்து அல் ஜசீரா செய்தியாளர் மேரி அன் ஜோலி வெளியிட்ட செய்தியின் தொடர்பில் அவர் விசாரணை செய்யப்படுவார் என்று மலேசிய காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த கொலை பற்றி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிவிக்கை வெளியிட்ட மரியாவுக்கு எதிராக குற்றவியல் சட்டப் பிரிவு 505 (பி)-ன் கீழ் இந்த விசாரணை நடத்தப்படும் என்று தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice

அதேவேளையில், நேற்று அல் ஜசீரா தொலைகாட்சியின் 101 கிழக்கு என்ற நிகழ்ச்சியி ‘மலேசியாவில் கொலை’ என்ற பெயரில் வெளியான நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் காலிட் மறுத்துள்ளார்.