புத்ராஜெயா – 2015-ம் ஆண்டிற்கான மூன்றாவது மற்றும் இறுதி 1மலேசியா உதவித் தொகை (BR1M), வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ள ஹரிராயா ஹஜி இஸ்லாம் பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 21-ம் தேதியே பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஹுஸ்னி ஹனட்ஸ்லா தெரிவித்துள்ளார்.
அந்தத் தொகை உதவித்தொகை பெறுபவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் சென்றுவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வங்கிக் கணக்கு இல்லாதவர்களின் முகவரிக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி பிஎஸ்என், மலாய் வங்கி, சிஐஎம்பி அல்லது பொதுவங்கிக் கிளைகள் ஆகியவற்றில் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம்” என்று அகமட் ஹுஸ்னி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.