கோலாலம்பூர்: முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பந்துவான் ராக்யாட் 1 மலேசியா (பிரிம்) திட்டத்துடன் ஒப்பிடும்போது, பந்துவான் சாரா ஹிடுப் (பிஎஸ்எச்) உதவி போதுமானதாக இல்லை என்று ஒரு கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறுயுள்ளனர்.
சிட்டிபிளஸ் எப்.எம் உடன் இணைந்து சந்தை ஆராய்ச்சி நிறுவனமான வாஸ்.ஏஐயால் (Vase.ai) மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 1,045 மலேசியர்களை நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட, வரவு செலவுத் திட்டம் குறித்த அவர்களின் எண்ணங்களை முன்னதாக வாக்களிப்பின் மூலம் தெரிவிக்க நடத்தப்பட்டது.
கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 51 விழுக்காட்டினர் பிரிம் உடன் ஒப்பிடும்போது பிஎஸ்எச் போதுமானதாக இல்லை என்று நினைக்கிறார்கள்.
பிரிம் உடன் ஒப்பிடும்போது பிஎஸ்எச் ஒரு முன்னேற்றம் என்று 24 விழுக்காட்டினர் நம்புகின்றனர்.
மீதமுள்ள 25 விழுக்காட்டினர் இந்த திட்டத்தினால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் சுமார் 52 விழுக்காட்டினர் மாத வருமானம் 3,000 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவாக பெறுபவர்கள்.
கடந்த ஆண்டு தனது முதல் வரவு செலவுத் திட்டத்தில் பிரிம் திட்டத்தை பிஎஸ்எச்–ஆக நம்பிக்கைக் கூட்டணி மாற்றியமைத்தது.