Home Featured இந்தியா நொய்டாவில் தலித் குடும்பத்தினரை காவல் துறை நிர்வாணப்படுத்தி தாக்கியதா?

நொய்டாவில் தலித் குடும்பத்தினரை காவல் துறை நிர்வாணப்படுத்தி தாக்கியதா?

668
0
SHARE
Ad

dalitநொய்டா – டெல்லியை அடுத்த நொய்டா பகுதியின் கவுதம புத்த நகரில் தலித் குடும்பம் ஒன்றை காவல்துறையும், அப்பகுதி பொதுமக்களும் நடுவீதியில் நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளதாக ஊடகங்களில் காணொளியுடன் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இது தொடர்பாக வெளியாகி உள்ள காணொளியில் இரு ஆண்களும், இரு பெண்களும் ஆடைகளைக் களைந்த நிலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறனர். அதன் பின்னர் அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். நடக்கும் சம்பவங்களை அப்பகுதி வாசிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

குறிப்பிட்ட அந்த ஆண்களும், பெண்களும் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டனரா? அல்லது சாதிய வேற்றுமை இந்த சம்பவத்திற்கு காரணமா? அல்லது அவர்கள் வேண்டுமென்றே முன்வைத்த போராட்டமா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த காணொளி வெளியான சில மணி நேரங்களில் இணைய தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

சம்பவத்தின் உண்மை நிலை அறியாது பலர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த குடும்பத்தினர் ஒடுக்கப்பட்டதாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஒன் இந்தியாவில் வெளியாகி உள்ள அந்த காணொளி: