Home Featured கலையுலகம் ஒருவாரம் முன்னரே மரணம் குறித்து பேசிய மனோரமா!

ஒருவாரம் முன்னரே மரணம் குறித்து பேசிய மனோரமா!

610
0
SHARE
Ad

manorama1சென்னை – தென்னிந்திய சினிமாவின் இணையற்ற கலைஞர்களுள் ஒருவரான ஆச்சி மனோரமாவின் மரணம், திரைத்துறையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர், ஒருவாரம் முன்னரே பொது நிகழ்ச்சி ஒன்றில், தனது மரணம் குறித்து பேசியிருப்பது நம்மை நெகிழ வைக்கிறது.

வயோதிகம் காரணமாக விழாக்களை தவிர்த்து வந்த மனோரமா, கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்து முடிந்த திரைத்துறை ஊடகவியலாளர்கள் கூட்டம் தான்.

கமல், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த விழாவில் வழக்கத்திற்குமாறாக நீண்ட நேரம் பேசிய மனோரமா, சென்னைத் தமிழில் குட்டிக் கதைகளை கூறி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். மேலும் தான் இந்த தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பலமுறை கூறினார். அப்போது அவரின் பேச்சு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

#TamilSchoolmychoice

அவர், “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இப்போது செத்துப் போனால் கூட ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று கூறினார். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒருவார காலமே ஆகி உள்ள நிலையில், அவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.