Home Featured கலையுலகம் மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ – கலைஞர் -கமல்-அஜித் (படக் காட்சிகள் – தொகுப்பு 3)

மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்திய ஜெ – கலைஞர் -கமல்-அஜித் (படக் காட்சிகள் – தொகுப்பு 3)

975
0
SHARE
Ad

சென்னை – சனிக்கிழமை மரணமடைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவுக்கு நேற்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அந்தப் படக் காட்சிகளின் தொகுப்பு தொடர்கின்றது:-

Manorama-Jayalalithaa-walking to pay respects

#TamilSchoolmychoice

இறுதி அஞ்சலி செலுத்த தோழி சசிகலாவுடன் வருகை தரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா…மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய ஜெயலலிதா மனோரமாவுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து, மனோரமா தனக்கு உணவு சமைத்துப் பரிமாறிய சம்பவங்களை விவரித்தார்.

Manorama-kalaignar karunanithi-paying respects

மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்திய கலைஞர் …தனது இரங்கல் செய்தியில் “புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர்” என்று பாராட்டி, தான் எழுதிய “உதய சூரியன்”, “மணிமகுடம்” போன்ற நாடகங்களில் நடித்தவர் மனோரமா என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

Manorama-Kamal-paying respectsபல தருணங்களில் மனோரமாவின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிவரும் கமலஹாசன் அஞ்சலி செலுத்த வருகை தந்த போது… தனது மகள் சுருதிக்கு மனோரமா வாழ்த்து தெரிவித்ததையும் கமல் நினைவு கூர்ந்துள்ளார்.

Manorama-Ajith-paying respects

தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்திய அஜித் ….மற்ற பிரபலங்கள் போல் அல்லாது, தான் வாங்கி வந்த மலர் மாலையை காரில் இறங்கியது முதல் தனது கையாலேயே மரியாதை நிமித்தம், ஏந்திக் கொண்டு வந்து மனோரமாவின் நல்லுடலுக்குச் சாத்தினார் அஜித்…

Manorama-Kushbu Sunther-paying respects

நடிகை குஷ்புவும் அவரது கணவர் இயக்குநர் சுந்தரும் அஞ்சலி செலுத்துகின்றனர்…

Manorama-Simbu-paying respects

அஞ்சலி செலுத்திய சிம்பு – அவருக்குப் பின்னால் நடிகர் ஜெய்…

Manorama-Vishal-paying respects

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் போராட்டத்திற்கும் நடுவிலும், நடிகர் விஷால் மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அதே போல நடிகர் சரத்குமாரும் நீண்ட நேரம் மனோரமா இல்லத்தில் இருந்ததோடு, இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு, மனோரமாவின் நல்லுடல் தகனம் செய்யப்படும் வரை உடனிருந்தார்.

Manorama-Karthik-paying respects

நடிகர் கார்த்திக் அஞ்சலி செலுத்த வருகின்றார்….

Manorama-Prabu-Ramkumar- paying respects

கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நடிகர் பிரபுவும் அவரது மூத்த சகோதரரான ராம்குமாரும்…

– செல்லியல் தொகுப்பு