Home Featured நாடு ஞாயிற்றுக்கிழமை பேரணி: ஜமால் யூனோஸ் உட்பட 7 பேரிடம் விசாரணை!

ஞாயிற்றுக்கிழமை பேரணி: ஜமால் யூனோஸ் உட்பட 7 பேரிடம் விசாரணை!

655
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர்- கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணி தொடர்பில் சுங்கைபெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனோஸ் (படம்) உட்பட 7 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.

இவர்களில் சிலாங்கூர் அரசுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களும் அடங்குவர்.

ஜமால், அம்னோ இளையர் ஆட்சிக் குழு உறுப்பினர் அர்மான்ட் ஆசா அபு ஹனிஃபா உள்ளிட்ட 7 பேரும் செவ்வாய்க்கிழமை மதியம் 12.45 மணிக்கு அம்பாங் காவல்துறை தலைமையகத்துக்கு வந்தனர். அப்போது காவல்துறை தலைமையகத்துக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் ஜமால் பேசினார்.

#TamilSchoolmychoice

“விளக்கமறியலுக்காக காவல்துறை அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளோம். மேலும் நாங்கள் எதற்கும் பயப்படவில்லை என்பதை, நாங்கள் கன்னியவான்கள் என்பதை வெளிப்படுத்தவும் வந்திருக்கிறோம்.”

“மக்களுக்காக நாங்கள் எதையும் இழப்போம். தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதுடன், போராட்டங்களும் நடத்துவோம். எங்களது அடுத்த பேரணி நவம்பர் 8ஆம் தேதி சுபாங் ஜெயாவில் நடைபெறும். அதைத் தொடர்ந்து கெலானா ஜெயாவில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மாதந்தோறும் பேரணி நடைபெறும்” என்றார் ஜமால்.

பேரணிகள் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறப்படுமா? என்ற கேள்விக்கு, தங்கள் குழு எப்போதுமே சட்டத்தைப் பின்பற்றும் என்று அவர் பதிலளித்தார்.

“பேரணி நடத்தக்கூடிய இடங்கள் அனைத்தும் சிலாங்கூர் அரசுக்கு சொந்தமானவை. நாங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்தாலும், அச்சம் காரணமாக சிலாங்கூர் அரசு அனுமதி அளிப்பதில்லை” என்று ஜமால் மேலும் தெரிவித்தார்.