ஷா ஆலாம் – கடந்த ஒரு மாத காலமாக சுங்கை பூலோ சிறைச்சாலையில் இருந்து வந்த சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ் நேற்று செவ்வாய்க்கிழமை மூன்று பேர் உத்தரவாதத்துடன் 20 ஆயிரம் ரிங்கிட் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்டார்.
திங்கட்கிழமையன்று அம்பாங் கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றம் ஜமாலுக்கு வழங்கப்பட்டிருந்த பிணைகளை இரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் சுங்கை பூலோ சிறையில் தொடர்ந்து இருந்து வரும் நிலைமை ஏற்பட்டது.
எனினும், நேற்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் ஜமாலின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து 20 ஆயிரம் ரிங்கிட் பிணையில் ஜமாலை விடுதலை செய்தது.
இதனைத் தொடர்ந்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீடு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.