Home நாடு ஜமால் யூனுஸ் கோலாலம்பூர் கொண்டு வரப்பட்டார்!

ஜமால் யூனுஸ் கோலாலம்பூர் கொண்டு வரப்பட்டார்!

906
0
SHARE
Ad
டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – மலேசியாவிலிருந்து தப்பிச் சென்று இந்தோனிசியா சென்று, அங்கு இந்தோனிசியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசை மலேசியக் காவல் துறையினர் வெற்றிகரமாக மலேசியா கொண்டு வந்து சேர்த்தனர்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் அவர் கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்ததும், உடனடியாக உட்புற இரகசியப் பாதை வழியாக காவல் துறையினரால் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார்.

இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள் அவரைப் பார்க்க முடியவில்லை.

#TamilSchoolmychoice

அவர் அம்பாங் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.