Home நாடு சாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தரக் குடியிருப்பு இரத்தா?

சாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தரக் குடியிருப்பு இரத்தா?

1097
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்திய ஊடகமான டைம்ஸ் நௌ தொலைக்காட்சி, சாகிர் நாயக்கின் (படம்) மலேசிய நிரந்தரக் குடியிருப்பு இரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறியதாகத் தெரிவித்திருக்கிறது.

மலேசியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என இந்திய ஊடகங்கள் நேற்று முதல் தெரிவித்து வருகின்றன.

எனினும் அந்த செய்தியில் உண்மையில்லை என காவல் துறைத் தலைவர் புசி ஹருண் நேற்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சாகிர் நாயக்கின் வழக்கறிஞரும் தங்களுக்கு சாகிரை நாடு கடத்தும் அறிவிக்கை (நோட்டீஸ்) எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளதாக பிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்தான் சாகிர் நாயக் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுவார் என்ற ஆரூடங்கள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் இந்தியா எனக்குரிய பாதுகாப்பான இடம் அல்ல என்றும் அங்கு எனக்கு உரிய சட்டப் பாதுகாப்பு கிடைக்காது என்றும் சாகிர் அறிவித்திருக்கிறார்.

ஒரு மாதத்துக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்கு வருகை தந்து துன் மகாதீருடன் மேற்கொண்ட சந்திப்புக்கும் மலேசிய அரசாங்கத்தின் புதிய நிலைப்பாட்டிற்கும் தொடர்பிருப்பதாக கருதப்படுவதாகவும் டைம்ஸ் நௌ தொலைக்காட்சி தெரிவித்திருக்கின்றது.