Home நாடு சட்டவிரோதமாக வெளியேறினேனா? மறுக்கிறார் ஜமால் முகமட்!

சட்டவிரோதமாக வெளியேறினேனா? மறுக்கிறார் ஜமால் முகமட்!

1271
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சட்டவிரோதமான முறையில் கடந்த மே மாதம் நாட்டை விட்டு வெளியேறியதற்காக இன்று செவ்வாய்க்கிழமை அம்பாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

48 வயதான ஜமால் முகமட், கடந்த மே 25-ஆம் தேதி அம்பாங் புத்திரி மருத்துவமனையில் இருந்து வெளியேறி சட்டவிரோதமான பாதைகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

குடிநுழைவுத் துறையின் சட்டத்தின் அடிப்படையிலான இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஜமால் முகமட்டுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 5 வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பின்னர் ஜமால் 4 ஆயிரம் ரிங்கிட் பிணையில் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார். ஏற்கனவே, மற்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக 20 ஆயிரம் ரிங்கிட் பிணையில் ஜமால் இருந்து வருகிறார்.

#TamilSchoolmychoice