கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருணை நியமித்ததன் செல்லுபடியை சவால் செய்யும் விண்ணப்பத்தின் முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
அசாரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் அமிர் ஹம்சா அர்சாத், நீதிமன்றம் தனது முடிவை வழங்க அடுத்த ஆண்டு ஜனவரி 18- ஆம் தேதி புதிய தேதியை நிர்ணயித்திருப்பதை உறுதிப்படுத்தினார்.
புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அமல்படுத்தப்பட்டு வரும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி இன்று திட்டமிடப்பட்ட முடிவு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
“இந்த விஷயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்று அமிர் இன்று காலை மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.
“சம்மன்களை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தின் முடிவுக்கு ஜனவரி 18- ஆம் தேதியை நாங்கள் நீதிமன்றத்திற்கு முன்மொழிகிறோம், ஏனெனில் அந்த நாளில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அசார் மற்றும் மூவருக்கு எதிராக, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் நான்கு பேரின் வழக்கை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் இன்று முடிவு கூறுவதாக அறிவித்திருந்தது.