Home One Line P2 கொவிட்19: 90 விழுக்காடு செயல்படும் தடுப்பூசி கண்டுபிடிப்பு

கொவிட்19: 90 விழுக்காடு செயல்படும் தடுப்பூசி கண்டுபிடிப்பு

532
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் பயோ-என்-டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொவிட்-19 தடுப்பூசி பரிசோதனைகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளும் கொவிட்-19 தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. பல கட்டப் பரிசோதனைகள் நடத்தி அதன் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், இ ந் நிருவனங்களின் கண்டுபிடித்து புதியதொரு நம்பிக்கையைத் தூண்டியுள்ளது.

இந்த தடுப்பூசி 90 விழுக்காடு செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற 28 நாட்களில் மனிதர்களுக்கு முழு பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. இரண்டாவது டோஸ் பெற்ற ஏழாவது நாளிலேயே முழுமையான பாதுகாப்பு கிடைத்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதன்மூலம் உலக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான படியில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளோம் என்று கூறலாம். இந்த தடுப்பூசி உலகம் சந்தித்துள்ள சுகாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாண்டு மட்டும் உலகம் முழுவதும் 50 மில்லியன் தடுப்பூசிகள் தயாரித்து வழங்க முடியும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு 1.3 பில்லியன் மருந்துகள் வழங்க முடியும் என்று கணித்துள்ளது.