கோலாலம்பூர்: சபா மக்களுக்கு, குறிப்பாக பந்துவான் பிரிஹாதின் நேஷனல் கீழ் உதவிப் பெறுபவர்களுக்கு 1,000 ரிங்கிட் கூடுதல் ரொக்க நிதி வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீண்டும் வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டு மாநிலத்திற்கு 1.25 பில்லியன் ரிங்கிட் பெட்ரோலிய வரி செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல சபா மக்களுக்கு உடனடி உதவி தேவை என்று அவர் கூறினார்.
“சபாவுக்கு இப்போது உதவி தேவை, அடுத்த ஆண்டு அல்ல,” என்று பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இன்று மக்களவையில் 2021 வரவு செலவு திட்டம் குறித்த விவாத அமர்வின் போது கூறினார்.
இன்றுவரை, சபாவில் பி40 மற்றும் எம்40 பிரிவுகளில் இருந்து 737,797 பிபிஎன் பெறுநர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.