Home One Line P1 வரவு செலவு திட்டம்: சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் காவல் துறையில் புகார்

வரவு செலவு திட்டம்: சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் காவல் துறையில் புகார்

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பிரதமர் துறை உட்பட பல அமைச்சகங்களிடமிருந்து உதவிப் பெற தவறியதிலிருந்து, சுற்றுலா பேருந்து ஓட்டுனர்கள் தொண்டு நிறுவனம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

புத்ராஜெயா காவல் நிலையத்தில் இந்த புகார் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

பெர்துபுஹான் கெமிலாங் டிராவல் ஏஜென்சி டான் பெங்குசாஹா பஸ் மலேசியா (ஜிஏபிபி பாஸ் மலேசியா) கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த வரவு செலவு திட்டம் சுற்றுலா பேருந்து உரிமையாளருக்கும் பயனளிக்கவில்லை என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இது 2021 வரவு செலவு திட்டத்திற்கு எதிரான முதல் காவல் துறை புகார் அறிக்கை என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

கொவிட் -19 தொற்றால் பிப்ரவரி முதல் வருமான ஆதாரத்தை இழந்த நாடு முழுவதும் உள்ள 6,800- க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளர்களுக்கு உதவுமாறு தனது தரப்பின் முந்தைய கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததாக ஜிஏபிபி தலைவர் அப்துல் அசிஸ் இஸ்மாயில் கானி கூறினார்.

“மே 2020 முதல், பிரதமர் அலுவலகம் மற்றும் பல அமைச்சகங்களுக்கு நாங்கள் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தோம். வாடகை கொள்முதல் சட்டம் 1967 இன் கீழ் கடன் நிறுவனங்களுக்கு பேருந்து உரிமையாளர்களுக்கு திட்டமிடப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கல அவகாசம் அல்லது விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தோம்.

“2021 வரவு செலவு திட்டத்தை உருவாக்கும் முன் இந்த பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் எங்களுடன் விவாதித்திருக்க வேண்டும்,” என்று அசிஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.