கோலாலம்பூர் : அரச மன்னிப்பு கோரும் நஜிப்பின் மனு மீதான இறுதி முடிவு எடுக்கப்படும்வரையில் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என்று டான்ஸ்ரீ அசார் அசிசான் ஹாருன் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பல ஆவணங்களைத் தான் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அசார் அசிசான் ஹாருண் மேலும் தெரிவித்தார்.
நஜிப் துன் ரசாக் அரச மன்னிப்பு கோரும் மனுவை மாமன்னரிடம் சமர்த்துள்ளார். அதன் முடிவு தெரியும்வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில், டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அசார் அசிசான் குறிப்பிட்டார்.