Home இந்தியா ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணம் தொடங்குகிறார்

ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணம் தொடங்குகிறார்

655
0
SHARE
Ad

கன்னியாகுமரி : சரிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைத் தூக்கி நிறுத்த ராகுல் காந்தி நாளை புதன்கிழமை (செப்டம்பர் 7) தொடங்கி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடத்தவிருக்கும் இந்தப் பயணத்திற்கு `பாரத் ஜோடோ யாத்ரா’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.

நாளை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தைத் தொடங்குகிறார். 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல ராகுல் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.