Home Featured நாடு பாஸ் எதிர்க்கட்சியா? தேமு உறுப்புக் கட்சியா? – அமனா கேள்வி!

பாஸ் எதிர்க்கட்சியா? தேமு உறுப்புக் கட்சியா? – அமனா கேள்வி!

630
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர்- பாஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சியாக நீடிக்கிறதா அல்லது தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அமனா நெகாரா வலியுறுத்தி உள்ளது.

யாருடன் இணைந்து செயல்படுவது என்பதை தீர்மானிக்கும் உரிமை பாஸ் கட்சிக்கு உண்டு என்ற போதிலும், தங்களது அசியல் பாதை குறித்து அவர்கள் தெளிவாக அறிவிக்க வேண்டும் என அமானா நெராகாவின் தகவல்தொடர்பு இயக்குநர் காலிட் சமாட் (படம்) வலியுறுத்தி உள்ளார்.

“எந்த வழியில் செல்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டுமா அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபடியே தேசிய முன்னணியை ஆதரிக்கப் போகிறார்களா? என்று அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் சரியான முடிவை எடுக்க முடியும்.”

#TamilSchoolmychoice

“வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக இரு தரப்பு நாடகத்தில் பாஸ் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சியாக வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, கடைசியில் அரசாங்கத்தை ஆதரிக்கிறது,” என்று காலிட் சமாட் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே பாஸ் கட்சியின் நடவடிக்கைகளில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் ஜசெக துணை தலைமை கொறடா அப்துல்லா சனி அப்துல் ஹமிட்.

தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்பட தயார் என பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அறிவித்திருப்பது தொடர்பில் கருத்துரைக்குமாறு கேட்ட போதே, அமனா நெகாரா பிரமுகர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.