Home Featured இந்தியா ஷாருக்கானை பாகிஸ்தானில் குடியேற அழைக்கும் தீவிரவாத அமைப்பு!

ஷாருக்கானை பாகிஸ்தானில் குடியேற அழைக்கும் தீவிரவாத அமைப்பு!

561
0
SHARE
Ad

habisபுதுடெல்லி – நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தானில் வந்து குடியேறுமாறு 1993-ம் ஆண்டு மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகமத் சயித் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ” எந்த முஸ்லிமும், ஷாருக்கான் உள்பட அனைவரும் இந்தியாவில் வாழ்வதில் கடினத்தை உணர்ந்தால், இனப்பாகுபாடு இருப்பதாக கருதினால், இஸ்லாமின் பேரில் பாகிஸ்தானில்  குடியேற அழைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ” இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இந்தியா மதசார்பின்மை கொண்ட  நாடு என்ற அடையாளத்தை இழந்து இந்து தேசமாக மாறி வருகிறது” என்றும் ஹபீஸ் சயித் அதில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ண்மையில் நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக நடிகர் ஷாருக்கான் கருத்து தெரிவித்திருந்தார். ஷாருக்கின் கருத்தையடுத்து இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது பாயத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.