Home Featured நாடு சுகாதார அமைச்சுக்கு வந்த மர்மப் பொடி: ஆபத்தில்லை என காவல்துறை விளக்கம்!

சுகாதார அமைச்சுக்கு வந்த மர்மப் பொடி: ஆபத்தில்லை என காவல்துறை விளக்கம்!

651
0
SHARE
Ad

புத்ராஜெயா- சுகாதார அமைச்சுக்கு வந்த மர்ம தபால் உறை தொடர்பான சந்தேகமும் பீதியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமையன்று அவசர அஞ்சல் (போஸ் லாஜு) மூலம் மர்ம தபால் ஒன்று வந்தது. அந்த தபால் உறையின் மீது மர்மப் பொடி காணப்பட்டதால், அமைச்சு ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

White-Powder-photoவெள்ளை நிற பொடி – மாதிரி படம்

இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சு அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்த உறையில் உள்ள பொருள் குறித்தும் நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டதாக புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ரோஸ்லி ஹான் தெரிவித்தார்.

இதில் அந்த உறையில் இருந்த பொருள் பொடியாக செய்யப்பட்ட வைட்டமின் ‘C’ என்பது தெரியவந்துள்ளது என்றும், யாரோ அதை தபால் உறையில் வைத்து சுகாதார அமைச்சு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினர்.

அந்த மர்ம உறையில் இருந்த பொடி காரணமாக தங்களது தோல் பகுதியில் அரிப்பு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சின் இரு ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்

அந்த உறையில் போலி முகவரி குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், என்ன நோக்கத்துடன் அந்த உறை அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.