புதுடில்லி – இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
சுந்தருடன் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினேன் என நரேந்திர மோடி மேற்கண்ட படத்தையும் வெளியிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சையில் இந்திய வருகையை இந்திய ஊடகங்கள் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன.
அவர் படித்த கல்லூரிக்கும் வருகை தந்த சுந்தர் அங்கு, இன்றைய மாணவர்களுடன் கலகலப்பான கலந்துரையாடல் ஒன்றிலும் கலந்து கொண்டார். அந்த கலந்துரையாடல் இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின.
மூன்று இலட்சம் இந்தியக் கிராமங்களை இணையத்தின் வழி ஒன்றிணைக்கும் மாபெரும் திட்டத்திற்கு கூகுள் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் சுந்தர் அறிவித்துள்ளார்.