Home Featured இந்தியா சோனியாவிற்கும், ராகுலுக்கும் சிறை? – பெரும் பரபரப்பில் டெல்லி அரசியல்!

சோனியாவிற்கும், ராகுலுக்கும் சிறை? – பெரும் பரபரப்பில் டெல்லி அரசியல்!

779
0
SHARE
Ad

sonia-rahulபுது டெல்லி – நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க முயற்சித்ததாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீதும், அவரது மகன் ராகுல் காந்தி மீது பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு தடை கோரி இருவரும் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். எனினும் அந்த மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 19-ம் தேதி (நாளை) டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதனை ஏற்ற இருவரும், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மதித்துள்ளனர். மேலும், தாங்கள் அப்பாவிகள் என்பதை சிறைக்கு சென்று நிரூபிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சோனியாவும், ராகுலும் நாளை சிறை செல்ல வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.