இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இரண்டாவது நாளே இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பதால் தான் எதிர்ப்பு கிளம்பி உள்ளதோ? என்று விசாரித்தால், எதிர்ப்பிற்கான காரணம் நடிகை எமி ஜாக்சனாம்.
தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என எமி கூறப்போக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எமியை படத்தை விட்டு நீக்க வேண்டும் இல்லையெனில், வரும் திங்கட்கிழமை அன்று நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர் வீடுகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழர் முன்னேற்றப் படை தெரிவித்துள்ளது.