பெய்ஜிங் – தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சென்சேன் நகரில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 33 கட்டிடங்கள் மண்ணில் புதைந்ததாகவும், ஏறக்குறைய 100 பேர் மாயமானதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மீட்புக் குழு, மண்ணில் புதைந்த ஆயிரம் பேரை மீட்டது. எனினும், ஆண்கள்-பெண்கள் என பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பலர் பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.