Home Featured நாடு கோத்தா ராயாவில் அடிதடி: அச்சத்தில் ஓடிய பொதுமக்கள்!

கோத்தா ராயாவில் அடிதடி: அச்சத்தில் ஓடிய பொதுமக்கள்!

805
0
SHARE
Ad

கோலாலம்பூர் – திறன்பேசி ஒன்றின் விற்பனை தொடர்பில் கோத்தா ராயா வணிக வளாகத்தில் நேற்று இரண்டு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற அடிதடி சண்டை, அங்கு இருந்த மற்ற வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நேற்று மாலை 4.55 மணியளவில், அங்கிருந்த திறன்பேசி விற்பனைக் கடை ஒன்றிற்கு கையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று, அங்கு வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட திறன்பேசியின் காசை அவரிடமே திரும்பத் தருமாறு கேட்டதாக ‘த ஸ்டார்’ உள்ளிட்ட முன்னணி செய்தி இணையதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நிலமையைச் சமாளிக்க நினைத்த அந்தக் கடை ஊழியர்கள், உடனடியாக கடையை மூட முயற்சி செய்துள்ளனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் இரு தரப்பினரிடையே அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இது குறித்து நகர குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த துணை ஆணையர் டத்தோ சைனுடின் அகமட் கூறுகையில், அச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

படம்: நன்றி (Aizuddin Saad)