Home Slider தென் சீனாவில் பெரும் நிலச்சரிவு – 100 பேர் மாயம்!

தென் சீனாவில் பெரும் நிலச்சரிவு – 100 பேர் மாயம்!

816
0
SHARE
Ad

landslideபெய்ஜிங் – தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சென்சேன் நகரில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 33 கட்டிடங்கள் மண்ணில் புதைந்ததாகவும், ஏறக்குறைய 100 பேர் மாயமானதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

shenzhen-lசம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மீட்புக் குழு, மண்ணில் புதைந்த ஆயிரம் பேரை மீட்டது. எனினும், ஆண்கள்-பெண்கள் என பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பலர் பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.