Home Featured நாடு அதிக தற்காப்பு நடவடிக்கை கொலையாக முடியலாம் – சட்டத்துறை வல்லுநர்கள் கருத்து!

அதிக தற்காப்பு நடவடிக்கை கொலையாக முடியலாம் – சட்டத்துறை வல்லுநர்கள் கருத்து!

625
0
SHARE
Ad

Murderகோலாலம்பூர் – கொள்ளையடிக்க வருபவனிடமிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவர்களின் உரிமை, ஒருவேளையில் எதிர்பாராதவிதமாக அவனைக் கொலை செய்தாலும் அது தற்காப்பாகவே சட்டம் கருதுகிறது என்று கூறப்படுகின்றது.

ஆனால், தற்காப்பிற்கும், கொலைக்கும் ஒரு நூலளவே வித்தியாசம் இருப்பதாக சட்டத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

திரெங்கானுவில் தனது வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை அந்த வீட்டின் உரிமையாளர் கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒரு கொள்ளையன் இறந்து போனான். இந்தச் சம்பவத்தை விசாரணை செய்த நீதிமன்றம் அந்த வீட்டின் உரிமையாளரின் மேல் கொலைக் குற்றம் சாட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு பொதுமக்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களில் இந்த விவகாரம் பலராலும் வாதிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிள்ளை இவ்விவகாரத்தில் உதாரணம் ஒன்றைக் கூறியுள்ளார்.

அதாவது, கையில் ஆயுதங்களுடன் வரும் கொள்ளையன் ஒருவனிடம், ஒரு வீட்டின் உரிமையாளர் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர் அந்தக் கொள்ளையனை கத்தியால் குத்திக் கொன்றுவிடுகின்றார்.

“தற்காப்பு என்பது நியாயமான காரணங்களுக்கான ஒரு சக்தி அதனால் தான் அது தற்காப்பு” என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

“அதேவேளையில், அந்த வீட்டு உரிமையாளர் அக்கொள்ளையனை மூன்று, நான்கு முறை கத்தியால் குத்தினால், அது தற்காப்பாகக் கருத இயலாது. மூன்று நான்கு முறை கத்தியால் குத்தினால் அது நோக்கத்துடன் செய்வதாகக் கருதப்படுகின்றது. எனவே அது ஒரு கொலையாக மாறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில், இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கர், “ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது. அதற்காக கொலை செய்ய சட்டத்தில் அனுமதி இல்லை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.