Home Featured நாடு இந்திரா காந்திக்கு ஆதரவாக பேஸ் புக் ஆதரவு இயக்கம்!

இந்திரா காந்திக்கு ஆதரவாக பேஸ் புக் ஆதரவு இயக்கம்!

731
0
SHARE
Ad

Indira Gandhi-Justice for Indira face bookகோலாலம்பூர் – தனது குழந்தைகளின் இஸ்லாமிய மதம் மாற்றப் பிரச்சனையால் நீதிமன்றப் போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்திக்கு கைகொடுக்கவும், ஆதரவு தெரிவிக்கவும், மஇகா மகளிர் பகுதி முன் வந்துள்ளது.

இதற்கான ஒரு நூதனமான முறையிலான போராட்டத்தை மஇகா மகளிர் பகுதி அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவின் அனைத்து நிலைகளிலான தலைவர்களிடத்திலும் மனமாற்றத்தைக் கொண்டுவர, ஒரு நெருக்குதலை ஏற்படுத்த, இந்திரா காந்திக்கு ஆதரவான பேஸ் புக் – முகநூல் – பக்கம் ஒன்றைத் மஇகா மகளிர் பகுதி தொடக்கியுள்ளதாக, அந்தப் பிரிவின் தலைவி மோகனா முனியாண்டி (படம்) தெரிவித்துள்ளார்.

Mohana Muniandy“ஜஸ்டிஸ் ஃபோர் இந்திரா’ (Justice for Indira) என்ற தலைப்பில் இந்த முகநூல் பக்கம் செயல்படும்.

#TamilSchoolmychoice

இந்திரா காந்தியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள் இந்த பேஸ்புக் பக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது ‘லைக்’ எனப்படும் ‘விருப்பம்’ எனத் தேர்ந்தெடுத்து ஆதரவு தெரிவிக்கலாம்.

குழந்தைகள், பெற்றோர்களின் அனுமதியின்றி மதமாற்றம் செய்யப்படுவதை  சட்டத் திருத்தங்களின் மூலம் நிறுத்துவதற்கான ஒரு போராட்டமாக, ஒரு நெருக்குதலாக இந்த பேஸ் புக் ஆதரவுப் பக்கத்தை தாங்கள் பயன்படுத்தப் போவதாகவும் மோகனா முனியாண்டி அறிவித்துள்ளார்.

இந்திரா காந்தியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரும் இந்த பேஸ்புக் பக்கம் சென்று ‘லைக்’ செய்யுமாறும், இந்தத் தகவலை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியும் மோகனா முனியாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.