Home Featured வணிகம் இனி பரிவர்த்தனைகளுக்கு ரொக்கம் வேண்டாம், கைப்பட்டை போதும்: மலாயன் வங்கி

இனி பரிவர்த்தனைகளுக்கு ரொக்கம் வேண்டாம், கைப்பட்டை போதும்: மலாயன் வங்கி

611
0
SHARE
Ad

maybank-visa-paybandகோலாலம்பூர் – மலாயன் வங்கியும், விசா நிறுவனமும் இணைந்து மலேசியாவில் முதல் முறையாக ‘மேபேங் விசா பேபேண்ட்’ (Maybank Visa Payband) என்ற புதிய தொழில்நுட்பக் கைப்பட்டை ஒன்றை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளன. வாடிக்கையாளர்கள் மிக எளிதாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காகவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் ஏறக்குறைய 1000 இடங்களில் இந்த கைப்பட்டை மூலம் பரிவர்த்தனைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விசாவின் மலேசியக் கிளை மேலாளர் இங் காங் பூன் கூறுகையில், “இணைப்பு தேவைபடாத (பணப்பரிவர்த்தனைகளுக்காக வங்கியை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லாத) இந்த வசதிக்கு மலேசியர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். ரொக்கம் கொடுக்க வேண்டிய இடங்களில் கைப்பட்டையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக பூங்காக்களில், நிகழ்ச்சிகளில், இசைக் கச்சேரிகளில் இந்தக் கைப்பட்டையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

#TamilSchoolmychoice

“ரொக்கப் பரிமாற்றம் இல்லாத சமூகத்தை உருவாக்க, இது மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கும். இதுவரை நாங்கள் ஏறக்குறைய 2.5 மில்லியன் விசா பேபேண்ட்களை புழக்கத்தில் விட்டுள்ளோம். இதன் தடம் அடுத்தடுத்து வளர்ச்சியைக் காணும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.