Home Featured நாடு டாக்டர் இயாவ் மறைவு மசீச-வுக்கு பேரிழப்பு – லியாவ் வருத்தம்!

டாக்டர் இயாவ் மறைவு மசீச-வுக்கு பேரிழப்பு – லியாவ் வருத்தம்!

626
0
SHARE
Ad

Dr.Yeow chai tiamகோலாலம்பூர் – மசீச கட்சியின் மூத்த தலைவரான டத்தோ டாக்டர் இயாவ் சாய் தியாமின் (வயது 63) (படம்) மறைவிற்கு டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையை ஆரோக்கியத்திற்காகவும், அரசியலுக்காகவும் அர்ப்பணித்தவர் டாக்டர் இயாவ் என்றும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

மசீசவின் டயாலிசிஸ் மையத்தை அமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் டாக்டர் இயாவ் என்றும், கட்சியின் சிறப்பு மருத்துவமனை கட்டும் திட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்றும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இறுதிவரை தன்னம்பிக்கை மிக்கவராக இருந்த இயாவின் மறைவு தனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் லியாவ் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலானின் முன்னாள் மசீச தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவருமான டாக்டர் இயாவ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலமானார்.

நேற்று இரவு 9 மணியளவில், தனது குடும்பத்தினர் அனைவரும் சூழ்ந்திருக்க இயாவ் தனது கடைசி மூச்சை விட்டார் என்று கூறப்படுகின்றது.