மும்பை – இந்திய அறிவியல் காங்கிரஸ் ஒரு சர்க்கஸ் கூடாரம் என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மைசூரில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரசில் ஏன் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என பிரபல செய்தி ஊடகம், வெங்கட்ராமனிடம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த அவர், “நான் ஒரு நாள் (இந்திய அறிவியல் காங்கிரஸ்) கலந்து கொண்டிருக்கிறேன். அங்கு மிகக் குறைவாகவே அறிவியல் குறித்து விவாதிக்கப்பட்டது. அது ஒரு சர்க்கஸ் கூடாரம். அதனால் இனி என் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை இந்திய அறிவியல் காங்கிரசில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த முறை வெங்கட்ராமன் கலந்து கொண்ட போதே, இந்திய அறிவியலில் அரசியலும், மதமும் கலந்து இருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.