Home Featured கலையுலகம் அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவிற்கு விருது!

அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவிற்கு விருது!

542
0
SHARE
Ad

priyankaநியூ யார்க் – பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரான, குவான்டிகோவில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு அந்தத் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்-நடிகையருக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பிரியங்கா சோப்ராவிற்கு ‘பீப்பிள் சாய்ஸ்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்றது தொடர்பாக பிரியங்கா சோப்ரா கூறுகையில், “என்னை ஏற்றுக் கொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வெளிநாட்டுத் தொடர்களில் நான் நடிப்பது இதுவே முதல் முறை. இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.