Home Featured நாடு மலாக்காவில் தன்னை ‘இராணி அம்மா’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பெண் கைது!

மலாக்காவில் தன்னை ‘இராணி அம்மா’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பெண் கைது!

580
0
SHARE
Ad

ஜாசின் – தன்னை ‘இராணி அம்மா’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பெண் ஒருவரை, விசாரணை செய்வதற்காக மலாக்கா காவல்துறை கைது செய்துள்ளது.

நாளை சனிக்கிழமை சுங்கை ரம்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத முடிசூட்டு விழா குறித்து அப்பெண்ணிடம் காவல்துறை விசாரணை செய்வார்கள் என்று கூறப்படுகின்றது.

queenmama40 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணையும், அவரது கணவரையும், சுங்கை ரம்பாயிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து காவல்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக ஜாசின் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி சம்போர்னாக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாளைய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த பொதுமக்களிடமிருந்து கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் அப்பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது.

குற்றவியல் சட்டம் பிரிவு 419-ன் கீழ் அப்பெண் விசாரணை செய்யப்படவுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அண்மையில், தன்னை மலாக்கா சுல்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஒருவரை காவல்துறை விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

படம்: நன்றி (The Star)