Home Featured தமிழ் நாடு ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைத் தேதி அறிவிப்பு!

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைத் தேதி அறிவிப்பு!

420
0
SHARE
Ad

jaya_புதுடில்லி – தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி மாதம் 02-ம் தேதி முதல் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.கே. அகர்வால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமிதவ ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.