Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் மதிப்புடைய 500 வணிக முத்திரைகளில் மே பேங்க் இடம் பெற்றது

உலகின் மதிப்புடைய 500 வணிக முத்திரைகளில் மே பேங்க் இடம் பெற்றது

1074
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகின் மிகுந்த மதிப்புடைய முதல் 500 வணிக முத்திரைகளை (பிராண்ட்) பட்டியலிட்டு வெளியிட்டு வரும் அமைப்பு பிராண்ட் பைனான்ஸ் குளோபல். 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மதிப்புடைய வணிக முத்திரையைக் கொண்ட 500 நிறுவனங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மே பேங்க் 494-வது இடத்தைப் பிடித்தது.

இந்தத் தர வரிசையில் உலகின் மிக மதிப்புடைய வணிக முத்திரையாக அமேசோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் மே பேங்க் வங்கியும் ஒன்றாகும். 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை மே பேங்க் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

மலேசியாவைப் பொறுத்தவரை முதல்நிலை வணிக முத்திரை கொண்ட வங்கியாக மே பேங்க் தொடர்ந்து தனது இடத்தைத் தக்கவைத்துக்  கொண்டுள்ளது.