Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் கிளை தொடங்க மலாயன் வங்கி பேச்சுவார்த்தை!

இந்தியாவில் கிளை தொடங்க மலாயன் வங்கி பேச்சுவார்த்தை!

1230
0
SHARE
Ad

Maybank_KL_கோலாலம்பூர் – மலேசியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான மலாயன் வங்கி (Maybank) இந்தியாவில் தனது சொந்தக் கிளையைத் துவங்க பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றது.

இதுநாள் வரை துணை நிறுவனமான, மும்பையில் இருக்கும் இந்தோனிசியா அனைத்துலக வங்கியின் மூலம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து வந்த மலாயன் வங்கி, இனி தமது சொந்தக் கிளையைத் துவங்கவிருப்பதாக அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ முஸ்தபா முகமது கூறியிருக்கிறார்.

கடந்த 1995-ம் ஆண்டு மும்பையில் துவங்கப்பட்ட இந்தோனிசியா அனைத்துலக வங்கி 2008-ல் தனது இயக்கத்தை நிறுத்தி, பின்னர் 2013-ம் ஆண்டு முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.