Home இந்தியா கொள்ளையன் நாதுராம் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு!

கொள்ளையன் நாதுராம் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு!

1045
0
SHARE
Ad

Nadhuramசென்னை – கொளத்தூர் நகைக்கடை கொள்ளை, ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையன் நாதுராம் கடந்த வாரம் சனிக்கிழமை ராஜஸ்தான் காவல்துறையினரிடம் சிக்கினான்.

இந்நிலையில், தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு, நாதுராமை அழைத்து வர ராஜஸ்தான் சென்றனர். அவர்களிடம் ராஜஸ்தான் காவல்துறையினர் நாதுராமைப் பாதுகாப்பாக ஒப்படைந்தனர்.

இதனையடுத்து, இன்று வியாழக்கிழமை, அவர்கள் 8 பேரும்,  நாதுராமை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இன்று இரவோ அல்லது நாளையோ சென்னைக்கு வரும் நாதுராமை தமிழகக் காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யவிருக்கின்றனர்.