கோலாலம்பூர் – முன்னாள் மசீச தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ ஓங் கா திங் சீனாவுக்கான சிறப்புத் தூதர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த நவம்பர் 2011 முதற்கொண்டு மலேசியப் பிரதமரின் சீனாவுக்கான சிறப்புத் தூதர் என்ற பதவியை வகித்து வந்த ஓங் கா திங் மலேசியா-சீனா வணிக மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய இந்தப் பதவியை வகித்து வந்தாலும், கடந்த 2013 முதற்கொண்டு ஓங் கா திங் எந்தவித சம்பளத்தையோ, வருமானத்தையோ பெற்றுக் கொண்டிருக்கவில்லை.
தனது பதவிக் காலத்தின்போது சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படவும், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் வலுப்படவும் ஓங் பாடுபட்டார்.