சியோல் – எலியும், பூனையுமாக இருந்த வடகொரியா, தென்கொரியா இடையிலான உறவு, ஒலிம்பிக்ஸ் போட்டியின் மூலம் நட்புறவாக மாறியிருக்கிறது.
வடகொரியாவைச் சேர்ந்த ஐஸ் ஹாக்கி விளையாட்டாளர்கள் 12 பேர், கடும் பாதுகாப்புகள் நிறைந்த தென்கொரிய எல்லைக்குள் இன்று வியாழக்கிழமை நுழைந்தனர்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரு நாடுகளுக்கிடையில் ஒலிம்பிக்ஸ் போட்டியின் மூலம் நட்புறவு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
12 ஐஸ் ஹாக்கி வீரர்களுக்கும் தெற்கு சியோலில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜின்சியானில் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.
2018 குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டி தென்கொரியாவில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.