Home இந்தியா தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர்: பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர்: பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து என்ன?

904
0
SHARE
Ad

Tamilanthemissueசென்னை – கவிஞர் வைரமுத்துவின் ஆண்டாள் விவகாரம் அடங்குவதற்குள், தற்போது காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் செயலால் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது.

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அப்போது நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது. மேடையிலும், அரங்கிலும் இருந்த அனைவரும் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்திய போது, விஜயேந்திரர் மட்டும் அமர்ந்த நிலையில் கண்களை மூடிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடிய போது எழுந்து நின்றார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தமிழ்ப்பற்றாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் சங்கரமடம் வெளியிட்ட தகவலில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்த போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று தெரிவித்திருக்கிறது.

இது குறித்துப் பிரபலங்களும், அமைச்சர்களும் என்ன சொல்கிறார்கள்?

kamal-hassan-நடிகர் கமல்ஹாசன்:தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் எழுந்து நிற்பது என் கடமை. தியானம் செய்வது விஜயேந்திரரின் கடமை. தியானம் செய்வது கடமை என்றால் எழுந்து நிற்பதும் கடமைதான்

 

23-1393136711-bharathiraja1-600இயக்குநர் பாரதிராஜா: வாழ்வது தமிழ் மண், சுவாசிப்பது தமிழ் காற்று, சாப்பிடுவது தமிழ் சோறு, ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை தராத மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா? மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்களுக்கு இரத்தம் கொதிக்கவில்லையா?

2811-ameer-e_lஇயக்குநர் அமீர்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் செய்தவர், தேசிய கீதம் பாடும் போது செய்ய மாட்டாரா? ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் தொடர்ந்து போர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

 

sv-shekarநடிகர் எஸ்.வி.சேகர்: கடவுள் வாழ்த்து பாடல்களுக்கு அனைத்து தருணங்களிலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. பீடாதிபதிகள் எவ்வாறு மரியாதை செய்வார்களோ அந்த முறையில் மரியாதை செலுத்தினார். வைரமுத்து விவகாரத்தை திசைதிருப்பவே இதை பெரிதாக்குகின்றனர்.

 

veeramaniதிராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல், தேசிய கீதத்துக்கு மட்டும் எழுந்து நின்ற விஜயேந்திரர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.

 

vairamuthu9-600கவிஞர் வைரமுத்து: தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை.

 

 

07-pon-radhakrishnan4-600மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: தமிழுக்காக குரல் கொடுப்பவர் விஜயேந்திரர். விஜயேந்திரருக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

 

stalin1_350__மு.க.ஸ்டாலின்: தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அதுவும் ஆளுநருக்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது கண்டனத்துக்குரியது.

 

vaikoவை.கோ: கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தந்தை பெரியார் அவர்கள் கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது அதுபோன்றே எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். இப்படிப்பட்ட மரபுகளையும், நாகரிகப் பண்புகளையும் முறியடிக்கும் வகையில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொண்ட செயலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்

தற்போது இந்த விவகாரத்தில் விஜயேந்திரருக்கு எதிராக கண்டனங்களும், போராட்டங்களும் வலுத்து வருவதால் சங்கரமடத்திற்கு பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.