Home இந்தியா சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்!

சங்கர மடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்!

1027
0
SHARE
Ad
காஞ்சி பெரியவருடன் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சிபுரம் – காஞ்சி சங்கரமடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முக்தியடைந்ததையடுத்து, 70-வது மடாதிபதியாக, இளைய மடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுபேற்றிருக்கிறார்.

இதனை சங்கரமடத்தின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும், தற்போதைக்கு சங்கரமடத்திற்கு இளைய மடாதிபதி என யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 1969-ம் ஆண்டு, மார்ச் 13-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, தண்டலம் கிராமத்தில் பிறந்தவர் சங்கரநாராயணன். சிறுவயதிலேயே வேத மந்திரங்களைக் கற்றுத்தேர்ந்த சங்கரநாராயணன், தனது 11-வது வயதில் மகாராஷ்ட்ராவில் மகா பெரியவரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர், கடந்த 1989-ம் ஆண்டு, மே 29-ம் தேதி, காஞ்சிபுரத்தில் சந்நியாசியாக ஆனார். அன்று முதல் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.